செங்கம் பகுதியில் தரமற்ற கேன் குடிநீர் விற்பனை – மாவட்ட நிர்வாகம் ஆய்வு நடத்த கோரிக்கை

செங்கம் மற்றும் சுற்றுப்புற வட்டாரங்களில் தரமற்ற கேன் குடிநீர் விற்பனை செய்து வருவதால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஆய்வு செய்ய பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ந அதிகரித்து வரும் நிலையில் கேன் குடிநீர் தற்போது கிராமங்களிலும் 20 லீட்டர் ரூ.40 முதல் 50 வரை விற்பனை செய்கின்றனர். சில நிறுவனங்கள் தண்ணீர் கேன்களை டோர் டெலிவரியாக வழங்குகின்றன. மக்களின் அதிகமான தேவையை பயன்படுத்தி பாட்டில்களில் குடிநீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் தோன்றியுள்ளன. முறையான அனுமதி பெறாமலும் தரமற்ற முறையில் குடிநீரை கேன்களில் அடைத்து விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செங்கம் சுற்றுப்புற வட்டார பகுதியில் குடிசை தொழிலாக மாறி வரும் தண்ணீர் விற்பனை தெருவுக்கு தெரு மற்றும் எல்லா கிராமங்களிலும் விற்பனை செய்கின்றனர். விற்பனை செய்யப்படும் குடிநீர் பாட்டில்கள், கேன்களில் தயாரிக்கும் நிறுவன பெயர் விபரங்கள் இல்லாத நிலையில் உள்ளது. தண்ணீர் கிடைக்காத கிராமங்களில் அதிக டிமாண்ட் உள்ளதால் மக்கள் தேவையை பயன்படுத்தி சிலர் விற்பனை செய்வதாக புகார் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற கேன், பாட்டில்களில் உள்ள நீரை குடித்தால் பல வகையான உடல் உபாதைகள் வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மாவட்டத்தில் பல இடங்களில் புற்றீசல் போல் மினரல் வாட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் தோன்றியுள்ள நிலையில், அவை முறையான அனுமதி பெற்றுள்ளதாக என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். ஒவ்வொரு கேன் மற்றும் பாட்டில்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் முழு முகவரி, தரச்சான்று, ஐஎஸ்ஐ எண்களையும் தயாரித்த நாள், காலாவதியாகும் நாள் என அனைத்தையும் பாட்டில், கேன்களில் பிரிண்ட் செய்திருக்க வேண்டும். அனுமதி பெற்று நடத்தப்படும் நிறுவனங்கள் தயாரிக்கும் குடிநீர் தரமானதாக உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு நடத்தாத நிலையில், செங்கம் பகுதியில் பல போலியான குடிநீர் நிறுவனங்கள் அனுமதி பெறாமலேயே தரமற்ற குடிநீரை விற்பனை செய்து வருகின்றன. பாட்டில்களில் தினமும் ஒரு பெயரில் ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலான பாட்டில் தண்ணீரை குடித்தால் ஒருவிதமான வாடை வருகிறது. செங்கம் பகுதியில் நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் உள்ள நிலையில் அனைத்து தரப்பு பெரியவர்கள் சிறியவர்கள் என அனைவரும் அச்சத்தில் உள்ளனர் .இதனால் தாகத்திற்காக சிறிதளவு மட்டும் தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு கீழே கொட்டும் நிலை உள்ளது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி மற்றும் சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.பொதுமக்களின் நலன் கருதி செங்கம் பேரூராட்சி அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் மூலம் பாட்டில்கள் கேன்களில் குடிநீர் விற்பனை செய்யும நிறுவனங்களை ஆய்வு நடத்த வேண்டும என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கும நிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட குடிநீர் தரத்தை பொதுமக்கள் https:/safewaterfssai.gov.in//cleanwater/home என்ற இணையதளத்தில் மூலம் தெரிந்து கொள்ளலாம். விற்பனை செய்யப்பட்டும் பாட்டில்கள் கேன்களில் ஐஎஸ்ஐ எண் உணவு பாதுகாப்பு உரிம எண் தயாரிக்கப்பட்ட குடிநீர் பரிசோதனை அறிக்கை, தயாரித்த நிறுவனத்தின் ஐஎஸ்ஐ எண், எந்த நாள் வரை பயன்படுத்த, நாள் விபரங்கள் இவற்றை அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு தண்ணீர் பாட்டிலும் அதன் தயாரிப்பு நிறுவனத்தில் ஐஎஸ்ஐ எண் மற்றும் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் இடம் பெற்றிருக்க வேண்டும். இந்த தகவல்கள் இல்லாத பாட்டில்கள் போலியானவையாகும். இரண்டு எண்களில் ஏதாவது ஒரு எண்ணை பயன்படுத்தி இணையதளத்தில் நிறுவனத்தின் முழுவிபரங்களை அறிந்து கொள்ளலாம். போலியானவை என்றால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் அல்லது உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளிக்கலாம் என்றார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!