திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 111 அரசு பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவ மாணவிகளுக்கு உலர் உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் அரிசி பருப்பு வழங்கப்பட்டது பக்கிரிப்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் நடந்த நிகழ்சிக்கு சத்துணவு மேலாளர் அண்ணாமலை தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சத்திய மூர்த்தி முன்னிலை வகித்தார். நிகழ்சியில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றியக் குழு தலைவர் விஜிய ராணி குமார் கலந்துக்கொண்டு மாணவர்களின் பெற்றோர்களிடம் அரிசி பருப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா முனியன் வட்டார கல்வி அலுவலர் சுபகோவிந்தராஜன் சத்துணவு அமைப்பாளர்கள் பொது மக்கள் கலந்துக்கொண்டனர். இதேபோல் , செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவிகளுக்கு அரசு வழங்கிய உலர் உணவுப் பொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றன.
செங்கம் அடுத்த மேல் பள்ளிப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு அரசு வழங்கிய உலர் உணவுப் பொருள்களான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்களை வழங்கினார்.விழாவிற்கு மேல் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பானுமதி ஜம்புலிங்கம் தலைமை தாங்கினார்.அப்பகுதியில் குழுமியிருந்த பொதுமக்களிடத்தில் கரோனா தொற்று பாதுகாப்பிலிருந்து பொதுமக்கள், குழந்தைகளை தற்காத்து கொள்வது குறித்தும், முககவசம் அணியும் முறைகள் பற்றியும் விளக்கிக் கூறினார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் முன்னிலை வகித்தார்.விழாவிற்கு தலைமை அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிகள் திமுக கழக ஊராட்சி நிர்வாகிகள் இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர் , மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் இதில் கலந்துகொண்டனர்.
செங்கம் செய்தியாளர் சரவணகுமார்.


You must be logged in to post a comment.