செங்கம பத்திரிக்கையாளர்கள் சார்பில் கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு மற்றும் கபசுரக் குடிநீர் முக கவசம் வழங்கும் விழிப்புணர்வு முகாம் செங்கம் அனைத்து ஊடகத்துறை மற்றும் பத்திரிக்கையாளர்கள் சார்பில் நடைபெற்றது. முகாமிற்கு செங்கம் வட்டாட்சியர் மனோகரன் தலைமை தாங்கினார். செங்கம் அதிமுக மேற்கு ஒன்றிய கழக செயலாளர் மகரிஷி மனோகரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் முன்னதாக செங்கம் செய்தியாளர் சக்திவேல் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.. செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணகுமரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கபசுர குடிநீர் மற்றும் முகக் கவசங்கள் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் வனத்துறை அதிகாரிகள், வழக்கறிஞர் செல்வராஜ், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஆசை முசிர் , ராஜி ,அதிமுக வார்டு செயலாளர் பியர்லஸ் குப்புசாமி, வணிக உரிமையாளர்கள் வியாபாரச் சங்கத்தினர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், அரசியல் பிரமுகர்கள, மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர், முகாம் ஒருங்கிணைப்பு பணிகளை செங்கம் அனைத்து பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகத் துறையினர் ஐயப்பன், தனஞ்செயன், குருபரன், எபினேசர், குகன், பிரகாஷ் ராபின், போத்தராஜா, மணிகண்டன் ஆகியோர் மேற்கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர் சரவணகுமார் அனைவருக்கும் நன்றி கூறினார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!