சாரண மாணவியருக்கு பாராட்டு விழா.
விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் பிரம்மானந்தன் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் மற்றும் திரி சாரணி ஆசிரியர் கலைவாணி அனைவரையும் வரவேற்று பேசினார்.பள்ளிக்கல்வி 2020-2021ஆம் ஆண்டிற்கான திட்ட ஒப்புதல் குழு அறிக்கையில் அரசு உயர்நிலை பள்ளி, மற்றும் அரசு மேனிலைப்பள்ளிப் பள்ளிகளில் இளைஞர் மற்றும் சூழல் சார் மன்றம் ஏற்படுத்துதல் மூலமாக கட்டுரை போட்டிகள் குறுவை மைய அளவில் நடைபெற்றது. சுற்றுச்சூழல், பல்லுயிர்,காலநிலை மற்றும் உள்ளூர் சூழலியல் ஊட்டச்சத்து,ஆரோக்கியம்,சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை பிரதிபலிக்கும் வகையில் கொரோனா கால கதாநாயகர்கள் என்ற தலைப்பில் நடைபெற்றது.அரசு மேனிலைப்பள்ளி, பழையனூர் பள்ளி தெரு சாரணி மாணவி இராஜலட்சுமி ரூ.7000 மதிப்புள்ள டேப் முதல் பரிசினை பெற்றுள்ளார்.பள்ளி தலைமையாசிரியர் மற்றும் திரி சாரணி ஆசிரியர் பரிசு வழங்கி பாராட்டினார்கள்.நிகழ்ச்சியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கர் , நவ நீதன் , அகிலாண்டேஸ்வரி மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் ஆசிரியர் சங்கர் நன்றி கூறினார்


You must be logged in to post a comment.