கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலி – சாத்தனூர் அணைக்கு செல்ல தடை .

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மேலும் சுற்றுலா தலங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.இதை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தண்டராம்பட்டு பகுதியில் சாத்தனூர் அணை முக்கிய சுற்றுலாத் தலமாகும். கோடைகாலத்தில் கிருஷ்ணகிரி விழுப்புரம் கள்ளக்குறிச்சி தருமபுரி மற்றும் அண்டை மாநிலங்கள் இருந்து பலதரப்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாத்தனூர் அணையில் பூங்காக்கள் முதலைப் பண்ணை படகு சவாரி என அனைத்தும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதுஇதற்கிடையில் அணை செல்லும் நுழைவு வாயில் பகுதி மூடப் பட்டது.இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, அரசின் வழிகாட்டுதலின்பேரில் சாத்தனூர் அணை, மற்றும் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொடரும் என்றனர்.கு நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!