திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் உள்ள மளிகைகடைகளில் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்வதாகவும் போலியான பொருட்களை குறைந்த விலைக்கு தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருவதால் பல்வேறு உபாதைகள் ஏற்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் இன்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கைலேஷ் குமார் திடீரென செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள மளிகை கடையில் ஆய்வு மேற்கொண்டார்.அப்பொழுது கடையின் உரிமையாளர் தரமற்ற டீ தூள், தரமற்ற சோம்பு விற்பனை செய்வதாக தெரிவித்து இரண்டு பொருட்களையும் ஆய்விற்காக எடுத்துச் செல்வதாக கூறி எடுத்துச் சென்ற பொழுது கடையின் உரிமையாளருக்கும் உணவு பாதுகாப்பு அதிகாரி கைலேஷ் குமார் ஆகிய இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது அப்பொழுது உரிமையாளர் உணவு பாதுகாப்பு அலுவலர் சைலேஷ் குமார் மாதம்தோறும் 10 ஆயிரம் தவறாமல் வழங்கி வருவதாகவும் கடந்த மாதம் ரூபாய் 2000 குறைவாக கொடுத்ததால் உணவு பாதுகாப்பு அதிகாரி தங்கள் கடை ஆய்வு மேற்கொண்டதாக குற்றம் சாட்டி வந்த நிலையில் கடையில் ஆய்வு மேற்கொண்டபோது கடையின் உரிமையாளர் தங்களிடம் ரூபாய் 8000 சென்றவாரம் லஞ்சம் பெற்றுக் கொண்டு தற்போது மீண்டும் லஞ்சம் கேட்டு தங்கள் கடைக்கு வந்ததாக பொதுமக்கள் மத்தியில் குற்றம் சாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.செங்கம் நகரில் பல்வேறு மளிகை கடைகளில் தரமற்ற உணவுப் பொருட்களும் போலியான பொருட்களும் அங்கீகாரம் இல்லாத பொருட்களும் மளிகை கடையில் விற்பனை செய்து வருகின்றனர் செங்கம் நகரில் உள்ள அனைத்து உணவகங்களில் தரமில்லாத உணவுப் பொருட்களும் தேனீர் கடைகளில் தரமற்ற டீ தூள் மற்றும் காபி தூளை பயன்படுத்தி பொதுமக்களுக்கு வினியோகித்து வருகின்றனர். இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் பலமுறை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் இதுநாள்வரை எந்த அதிகாரிகளும் உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் பேக்கரி உள்ளிட்ட கடைகளில் ஆய்வு மேற்கொள்வது கிடையாது இந்த நிலையில் திடீரென குறிப்பிட்ட மளிகை கடைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டது சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது இந்த நிலையில் உணவு பாதுகாப்பு அதிகாரி கடையின் உரிமையாளருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரி மாதம்தோறும் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு லஞ்சம் பெற்றது காரணம் என தெரியவந்துள்ளது.தரமான உணவு பொருட்களை விற்பனை செய்கின்றனர் என ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரி இதுபோன்று மாதம்தோறும் லஞ்சம் பெற்றுக் கொண்டு கண்டும் காணாமல் இருந்தது சம்பவம் அம்பலமானது மாதந்தோறும் லஞ்சம் தருவதை பொதுமக்கள் மத்தியில் கடையின் உரிமையாளர் தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதுபோன்று லஞ்சம் பெற்றுக் கொண்டு கடைகளில் ஆய்வு செய்யாமல் கடையில் உரிமையாளர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு சட்ட விரோதமான செயலில் ஈடுபடும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.


You must be logged in to post a comment.