செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வியாபாரிகளுக்கு ஆலோசனைக் கூட்டம்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்த நிலையில் இன்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அறிவித்திருக்கிறது இதனை முழுமையாக பொதுமக்கள் கடைபிடிக்கவும் அதிகளவில் செங்கம் பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூடாமல் இருக்க செங்கம் பகுதியில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கத்தினரை வரவழைத்து செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணகுமரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது தங்களது கடைகளுக்கு வியாபாரம் செய்ய வரும் பொதுமக்களுக்கு கட்டாயமாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் எனவும் ஒருவருக்கொருவர் இடித்துக் கொள்ளாமல் சமூக இடைவெளியை பின்பற்றி இடைவெளிவிட்டு நின்று பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டுமெனவும் இரவு நேர ஊரடங்கின் போது இரவு பத்து மணிக்கு அனைத்து கடைகளையும் கண்டிப்பாக மூட வேண்டுமெனவும் இரவு நேரங்களில் கடைகளுக்கு கொண்டு வருகின்ற சரக்கு வாகனங்களை அனுமதிக்க கூடாது எனவும் அரசு விதிமுறைகளை கடைபிடிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது தமிழக அரசு விதித்துள்ள விதிமுறைகளை கடைபிடிக்க வியாபாரிகள் சங்கம் முழு ஒத்துழைப்பு தரும் என வியாபாரிகள் சங்க தலைவர் சர்தார் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்தார் இந்த ஆலோசனை கூட்டத்தில் செங்கம் காவல் ஆய்வாளர் சரவணன் உதவி ஆய்வாளர் இயேசு ராஜ் சிறப்பு உதவி ஆய்வாளர் சம்பத் மற்றும் செங்கம் பகுதியில் உள்ள அனைத்து வியாபாரிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்த கொண்டனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!