ஜமுனாமரத்தூர் அதிமுக சார்பில் அம்மா நீர் மோர் பந்தல் திறப்பு விழா .

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ளவர்கள் அதிக அளவில் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர் தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்துவரும் நிலையில் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களின் தாகத்தை குறைக்க அதிமுக சார்பில் ஒவ்வொரு பகுதியிலும் தண்ணீர் பந்தல் திறக்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார் இந்நிலையில் செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள எம்ஜிஆர் சிலை முன்பு அம்மா தண்ணீர் பந்தல் திறப்பு விழா ஜமுனாமரத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கிளையூர் எம்.சி.அசோக் தலைமையில், நடைபெற்றது இந்த தண்ணீர் பந்தலை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் , முன்னாள் அமைச்சருமான அக்ரிஎஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார் அப்போது அங்குள்ள ஏராளமான பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி ,பனை நொங்கு, நீர்மோர், பழசாரகம் வெள்ளரிப்பிஞ்சு உள்ளிட்ட அனைத்தையும் மக்களுக்கு வழங்கினார் இன் நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளரும் , செங்கம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளருமான எம்.எஸ். நைனாகண்ணு, தெற்கு மாவட்ட துணை செயலாளர் அமுதா அருணாச்சலம், செங்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகரிஷி மனோகரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் அருணாச்சலம், மொலையனுர் வெள்ளையன், ரவிந்தரன்ராவ், ஏழுமலை, குப்பன், மாணிக்கம், ராமசாமி, கமலக்கண்ணன், ராம்ராஜ், காசி, மகேந்திரன், தாமோதிரன், சக்திவேல், சேகர், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் எம் கோபி, இளைஞர் பாசறை விஜய் சங்கரன், விட்டல்ராவ், மகளிர் அணி சரிதா, கல்யாணி, வசந்தா, திருப்பதி, கிருஷ்ணன், சங்கர், சத்யராஜ், ஆறுமுகம், செல்வம், கோவிந்தராஜ், நடராஜன், வெள்ளியங்கிரி, கோவிந்தசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மோர், நீர், தர்பூசணி, முலாம் பழம், இளநீர்மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!