செங்கம் பகுதியில் 10க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி – பொதுமக்கள் பீதி

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தற்போது நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 மாதங்களுக்கு பிறகு இன்று ஒரே நாளில் 10க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதால் செங்கம் பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர் செங்கம் அரசு மருத்துவமனை மற்றும் அரட்டவாடி வளையாம்பட்டு புதுப்பாளையம் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவம் பார்க்க வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது இந்த பரிசோதனையின் போது கொரோனா நோய்த்தொற்று இருப்பதாக 10க்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டது இதனைத் தொடர்ந்து செங்கம் அரசு மருத்துவமனையில் இருந்த உள் நோயாளி மற்றும் வெளி நோயாளிகளுக்கு கொரானா இருப்பதால் அவர்களை அங்குள்ள மருத்துவமனை தனி அறையில் அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதனால் பீதியடைந்த அப்பகுதி மக்கள் செங்கம் அரசு மருத்துவமனைக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர் உள் நோயாளிகளும் உடல்நிலை சரியானவுடன் தங்களது வீட்டிற்கு சென்று விடுகின்றனர் இதனால் நோயாளிகள் இன்றி செங்கம் அரசு மருத்துவமனை வெறிச்சோடி காணப்படுகிறது கொரோனா நோய்தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கட்டாயமாக சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து மருத்துவம் பார்க்க மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டுமென செங்கம் வட்டார தலைமை மருத்துவர் இளவரசி வேண்டுகோள் விடுத்துள்ளார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு ஒரே நாளில் 10க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகிருப்பது தனிமனித இடைவெளி மற்றும் முக கவசம் அணியாமல் இருந்து வருவதே இந்த நோய்த் தொற்று அதிகரிக்க முக்கிய காரணம் எனவும் சுகாதாரத்துறை சார்பில் தொடர்ந்து ஒவ்வொரு கிராமங்கள்தோறும் விழிப்புணர்வு முகாம் அமைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!