மயிலாடுதுறை நகராட்சியில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நகராட்சி வருவாய் உதவியாளர் ஒருவருக்கு கொரோனா
தொற்று உறுதியானதை தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் 22 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 13 பேருக்கு சோதனை முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது. அதில் நகராட்சி சுகாதார ஆய்வாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதனையடுத்து நகராட்சி ஊழியர்கள் கொரோனா பாதிப்பு இரண்டாக உயர்ந்துள்ளது மேலும் 9 நபர்களுக்கு முடிவுகள் தெரிய உள்ள நிலையில் 35-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். நகராட்சி அலுவலகம் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில் தொடர்ந்து அங்கு வந்து சென்றவர்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். நகராட்சியில் ஊழியர்களுக்கு நோய் ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரா.யோகுதாஸ், மயிலாடுதுறை செய்தியாளர்


You must be logged in to post a comment.