செங்கம் அதிமுக வேட்பாளரை ஆதரித்து 2 வயது குழந்தை வாக்கு சேகரிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற தனித்தொகுதி அதிமுக வேட்பாளர் எம் எஸ் நைனாகண்ணு அதிமுக வேட்பாளரை ஆதரித்து மேல் பள்ளிப்பட்டு கூட்டுறவு சங்க தலைவர் ஷர்மா என்பவரின் இரண்டு வயது குழந்தை லோகித் நைனா கண்ணு தாத்தாவுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு போடுங்கா என்று வாக்கு சேகரித்தார். 2 வயது குழந்தை வாக்கு சேகரித்த நிகழ்வு அரசியல் கட்சியினரிடையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. செங்கம் தொகுதிக்குட்பட்ட மேல்பள்ளிப்பட்டு கட்டமடுவு வணக்கம்பாடி செங்கம் டவுன் கிருஷ்ணாபுரம் இந்திராநகர் தளவாய் நாயக்கன் கோட்டை துர்க்கை அம்மன் கோவில் தெரு மில்லத் நகர் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அதிமுக வேட்பாளர் பேசுகையில் மக்கள் நலனுக்காக பாடுபடுவேன். பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார். வாக்கு சேகரிப்பின் போது மேற்கு ஒன்றிய செயலாளர் மகரிஷி மனோகரன் கிழக்கு ஒன்றிய செயலாளர் அருணாசலம் மாவட்ட துணை செயலாளர் அமுதா அருணாச்சலம், எம்ஜிஆர் மன்ற துணைத்தலைவர் கேகே மணி, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் பத்மா முனி கண்ணு மாவட்ட பிரதிநிதி மேல் பெண்ணாத்தூர் முருகன் முன்னாள் கவுன்சிலர் கலையரசி சரவணன் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!