திருவண்ணாமலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை.

திருவண்ணாமலை நகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது¸சமுதாய இடைவெளிதமிழகத்தின் அநேக பகுதிகளில் மீண்டும் கொரோனா காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் வருகின்றன மேலும் ஏற்கனவே இது குறித்த தமிழக அரசின் தடைகளும் அமலில் உள்ளன எனவே தங்கள் நிறுவனங்களில் ஏற்கனவே தெரிவித்தது போல் சமுதாய இடைவெளி ¸ உடல் வெப்பமானி பரிசோதனை¸ கிருமி நாசினி தெளித்தல்¸ மற்றும் கண்டிப்பாக தங்கள் பணியாளர்கள் முககவசம் அணிவதுடன் முகக்கவசம் அணிந்துவர்களை மட்டுமே நிறுவனத்திற்குள் அனுமதித்தல் போன்றவற்றை கடுமையாக கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறதுஎனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும் அதனை கடை பிடிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்கவும் நகராட்சியில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது எனவே தேவையற்ற மனக் கசப்பை தவிர்த்திட அரசின் வழிகாட்டுதல்களையும் நெறிமுறைகளையும் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!