வாட்ஸ்அப்-க்கு மாற்றாக ஹைடெக் செயலி அறிமுகம்.. தி.மலை 8-ஆம் வகுப்பு மாணவன் அசத்தல் .

திருவண்ணாமலை காந்தி நகர் 4-வது தெருவில் வசித்து வரும் கிருஷ்ணா என்பவரின் மகனான முகேஷ். 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது வீட்டில் முடங்கிய நிலையில், எல்லா சிறுவர்களையும் போல் முகேஷும் செல்போனில் விளையாடி நேரம் கழித்திருக்கிறார். துறுதுறுவென இருக்கும் மகனை சரியான வழியில் செலுத்த தாய் அமிர்தாவும், தந்தை கிருஷ்ணாவும் நினைத்திருக்கின்றனர். இதற்காக லேப்டாப் மற்றும் இணையதள வசதியை ஏற்படுத்திக் கொடுத்த அவர்கள், வாட்ஸ் ஆப்பில் ஏற்பட்ட பிரைவசி பிரச்னை தொடர்பாக கூறியுள்ளனர். அதனால், நமது நாட்டிலேயே தகவல் தொடர்பு செயலியை உருவாக்க வேண்டும் என உத்வேகம் அடைந்த முகேஷ், அதை சாதித்தும் காட்டியுள்ளார்.சின்னஞ்சிறு மாணவன் உருவாக்கிய ஹைடெக் ஆண்ட்ராய்டு செயலியில் 25000 நபர்கள் வரை இணைத்து ஒரு மிகப்பெரிய குழுவை உருவாக்கும் வகையிலான பல்வேறு சிறப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இணைந்து செயல்பட வருமாறு மாணவனுக்கு டெலிகிராம் நிறுவனம் அழைப்பு விடுத்தது. இதனைத் தொடர்ந்து, ஹைடெக் செயலி – டெலிகிராம் செயலி இடையே தகவல்களை பகிந்துகொள்ளும் வசதியும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.குடும்பத்தினருடன் மாணவன் முகேஷ்இதை உடனே தன்னால் சாதித்துவிட முடியவில்லை எனக் கூறும் சிறுவன் முகேஷ், யூ டியூப்பிலும், கூகுள் வலைதளத்திலும் தேடி சுமார் 20-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் படித்ததாக கூறுகிறார். அதிலும் பல போலி வெப்சைட்டுகளை தாண்டி ஜாவா, சி, சி + + போன்ற கணினி கோடிங் பாடங்களை கற்றுத்தேர்ந்ததாக கூறும் முகேஷ், இறுதியாக அதனை செயல்முறைக்கு கொண்டு வந்தாக தெரிவிக்கிறார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!