திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதிய குயிலம் தோப்பு கொட்டாய் அம்பேத்கர் நகர் அருகில் முனியப்பன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.யாக பூஜை, விசேச யாகபூர்த்தி, யாத்ராதானம், காலபூஜை போன்ற நிகழ்வுகளும் அதனைத் தொடர்ந் கும்பாபிஷேக விழாவும் அதனைத் தொடர்ந்து முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது.பூஜை முடிந்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதலும், அன்னதானம் வழங்கும் நிகழ்வு மற்றும் ஊர் பொதுமக்கள் பொங்கலிட்டு படையல் நிகழ்வு வெகு விமரிசையாக நடந்தேறின.இந்த முனீஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இந்த ஆலயத்திற்கு வந்து செல்வோருக்கு அவர்கள் நினைத்த காரியமெல்லாம் வெற்றியைத் தேடித்தரும் என்பது ஐதீகம. என்பது சிறப்பு.இந்த கும்பாபிஷே விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழாக்குழுவினர் தலைவர் எம்.ஆர்.முருகேசன் ,பன்னீர், குமார், காந்தி, முருகன், வெங்கடேசன், குமார் எம்.ஆர்.கிருஷ்ணன் செய்திருந்தனர். விழாவில் ஊர்மக்கள், அரசுத்துறை அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்
ஆலய பராமரிப்பு குழுவின் ஏற்பாட்டின் கும்பாபிஷேக விழா இனிதே நிறைவுபெற்றது


You must be logged in to post a comment.