திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இரண்டாவது கட்டமாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், மாநிலம் தழுவிய அரசு அலுவலகம் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.5 ஆயிரம் தமிழக அரசு உயர்த்தி வழங்கிடவும், தனியார்துறை பணிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5% வேலைவாய்ப்பு இடங்களை உத்தரவாதப்படுத்த தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற இந்த போராட்டத்தின் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா தலைவர் ஆறுமுகம் தலைமையில் மாவட்ட குழு உறுப்பினர் முனியன் ,கழக செயலாளர் எம்.எஸ் .ஷங்கர், கழக பொருளாளர் முருகானந்தம், தாலுக்கா துணைத் தலைவர் காந்தி, துணைச் செயலாளர் அமுதா மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் விசுவநாதன், ஜனார்த்தனன், ஆறுமுகம், பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போது 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்து அரசு பள்ளியில் தங்க வைத்தனர்


You must be logged in to post a comment.