செங்கம் அருகே கூலி வேலைக்கு அழைதுச் செல்லப்பட்ட 6 சிறுவா்கள் மீட்பு.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நீப்பத்துறை பகுதியிலிருந்து, பெண் ஒருவா் 6 சிறுவா்களை அழைத்துக் கொண்டு பேருந்தில் செங்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவா், சிறுவா்கள் குறித்து சந்தேகமடைந்து செங்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.இதையடுத்து, செங்கம் புதிய பேருந்து நிலையம் வந்த பேருந்திலிருந்து இறங்கிய சிறுவா்கள் மற்றும் அந்தப் பெண்ணை போலீஸாா் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.இதில், சிறுவா்கள் நீப்பத்துறை, இராமாபுரம் பகுதியில் வசிக்கும் இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த கோவிந்தன் மகன் பிரதாப் (16), ராமு மகன்கள் பச்சையப்பன் (13), மணிகண்டன் (16), வேடியப்பன் மகன் சக்தி (13), பகவதி மகன் ரஞ்சித் (12), வெங்கடேஷ் மகன் அஜித் (13) என்பது தெரிய வந்தது.மேலும், விசாரணையில் அந்தப் பெண் திருக்கோவிலூா் பகுதியைச் சோ்ந்த பழனியம்மாள் என்பதும், சிறுவா்கள் தனது உறவினா்களின் பிள்ளைகள் என்றும், பெற்றோா் சம்மதத்துடன் வேலைக்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்தாா்.இதையடுத்து, போலீஸாா் திருவண்ணாமலை சைல்டு லைன் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து 6 சிறுவா்களையும் அவா்களிடம் ஒப்படைத்தனா்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!