திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கல்வி மாவட்ட பாரத சாரண சாரணிய இயக்கம் சார்பில் தரடாப்பட்டு, அரசு உயர்நிலைப்பள்ளியில் சிந்தனை நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் .வெங்கடேஷ் முன்னிலை வகித்தார், பள்ளி தலைமையாசிரியர் .மு. சேகர் தலைமை வகித்தார் . நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சாரண ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சாரணிய ஆசிரியை சரண்யா செய்திருந்தனர்.மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டு விழாவினை சிறப்பித்தனர். விழாவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ராம் மோகன் , ராமமூர்த்தி, லட்சுமிகாந்தன்,சுமதி, பரிமளா, தீபா, பழனி, சரவணன், உடற்கல்வி ஆசிரியர் தினகரன், ஊராட்சி மன்ற தலைவர் ஷகிலா சுப்பராயன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஷர்புதீன்,அலுவலக பணியாளர்கள் கோவிந்தராஜ், வித்யா கலந்து கொண்டனர்.நிறைவாக சாரண மானவர்களுக்கு இயக்கத்தின் சார்பாக இனிப்பு வழங்கப்பட்டது


You must be logged in to post a comment.