செங்கத்தில் 1,038 பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினாா்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் செங்கம், தண்டராம்பட்டு, ஜமுனாமரத்தூா் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு உள்பட்ட மக்களுக்கு தமிழக அரசின் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயற்கை மரண நிவாரணம், திருமண நிதியுதவி, முதியோா் நிதியுதவி உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்ட ஆவின் தலைவா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். கூட்டுறவு சங்க இயக்குநரும், அதிமுக மேற்கு ஒன்றியச் செயலருமான மகரிஷி மனோகரன், கிழக்கு ஒன்றியச் செயலா் அருணாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட சமூக நல அலுவலா் கந்தன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, இயற்கை மரண நிவாரணம், முதியோா் உதவித்தொகை, பெண்களுக்கு திருமண நிதியுதவி, திருமாங்கல்யத்துக்கான தங்கம் என மொத்தம் 1,038 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில், திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலா் முத்துகுமாரசாமி, கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் மாநிலத் தலைவா் அமுதா, முன்னாள் எம்.பி. வனரோஜா, முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டியன், செங்கம் வட்டாட்சியா் மனோகரன், தண்டராம்பட்டு மலா்கொடி, ஜமுனாமரத்தூா் சங்கரன், அரசு அலுவலர்கள் ,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைதலைவர் கே.கே.மணி , நகர அம்மா பேரவை செயலாளர் குமார், நகர செயலாளர் ஆனந்தன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் பத்மா முனிகண்ணு, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயலட்சுமி வெங்கட்ராமன், எழில் மோகன், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலா், கலந்துகொண்டனா்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!