திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி செங்கம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் வெண்ணிலா தலைமையில் சென்னை உயர்நீதிமன்ற அரசாணையின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள் பெயர் பலகைகள் கட்டாயமாக தமிழில் வைக்கக்கோரி கட்சி நிர்வாகிகளுடன் வட்டாட்சியர் மனோகரன் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டதுசெங்கம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீ.வெண்ணிலா தலைமையில் வட்டாட்சியர் மனோகரனிடம் அனைத்து வணிக நிறுவனங்கள் பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்க வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது;தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெயர் பலகைகள் கட்டாயமாக முதலில் தமிழிலும் அடுத்து தேவைப்பட்டால் ஆங்கிலம் பிறமொழிகளில் அமைதல் வேண்டும் .தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும் பயன்படுத்தும் நிலையில் 5.3 என்ற அளவில் அமைதல் வேண்டும் ஆனால் நடைமுறையில் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் நெறிமுறைகளை கடைப்பிடிக்காமல் இருப்பதை தமிழ்நாடு முழுவதும் காணப்படுகிறது .தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் நடைமுறையில் தமிழ் மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க தமிழக அரசு கொண்டு வந்த இந்த அரசாணைகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ் பெயர் பலகை நெறிமுறைகளை வட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் நிறுவனங்கள் கடைபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க நாம் தமிழர் கட்சியின் சார்பாக கேட்டுக் கொள்ளபடுகிறது என்று மனுவில் கூறப்பட்டுள்ளதுஇந்நிகழ்வில் உழவர் பாசறை செயலாளர் சாந்தகுமார் செங்கம் வடக்கு ஒன்றிய துணைத் தலைவர் வெங்கடேசன் தண்டராம்பட்டு வடக்கு ஒன்றிய செயலாளர் ஹரிஹரன் பேரூராட்சி செயலாளர் திருப்பதி சிவா சோமசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்


You must be logged in to post a comment.