செங்கம் அருகே அம்மா மினி கிளினிக் திறப்பு விழாஅமைச்சர் பங்கேற்பு.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கட்டமடுவு கிராமத்தில் தமிழக அரசின் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் பற்றி விரிவாக பேசினார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலை துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு அம்மா சிறு மருத்துவமனையைத் தொடக்கிவைத்தாா். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அஜிதா அனைவரையும் வரவேற்று பேசினார். வட்டார மருத்துவர் சுரேஷ் தலைமையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றி கர்ப்பிணி மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கான அரசு பரிசு பெட்டகங்களை வழங்கினார் . தெற்கு மாவட்ட துணை செயலாளர் அமுதா அருணாச்சலம், ஆரணி ஆவின் பால் கூட்டுறவு துணைத்தலைவர் பாரி பாபு ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் இந்நிகழ்ச்சிக்கு கட்டமடுவு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி வெங்கட்ராமன் விழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார். அதிமுக செங்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகரிஷி மனோகரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் அருணாச்சலம் அமுதா , ஜமுனாமரத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.சி. அசோக்,மேல்ராவந்தவாடி ஒன்றிய கவுன்சிலர் சற்குனேசன், மற்றும் அதிமுக ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர் மேலும் இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவர்கள் மருத்துவ செவிலியர்கள் மஸ்தூர் பணியாளர்கள் கலந்து கொண்டனர். செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணகுமரன் ஆலோசனையின்படி சிறப்பு பாதுகாப்பு பணியினை மேல்செங்கம் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் மற்றும் செங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோமதி ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!