திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கோனாங்குட்டை கேட் அருகே தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்டக் கழக துணைச் செயலாளர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது . மாநில செயலாளர் குமார் , செங்கம் பேரூராட்சி செயலாளர் அசோக்குமார் செங்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் ஜேசிபி சங்கர், தண்டராம்பட்டு கிழக்கு ஒன்றிய செயலாளர் திருப்பதி, தண்டராம்பட்டு மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ் , ஜவ்வாது மலை ஒன்றிய செயலாளர்கள் ரவி, சம்பத், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக கழக கேப்டன் மன்ற துணை செயலாளரும் சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளரும் ராஜா சந்திரசேகர், கழக தேர்தல் பிரிவு செயலாளர் வி.எஸ்.மணிகண்டன் மற்றும் மாவட்ட கழக செயலாளர் நேரு ஆகியோர் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்து தேர்தல் குறித்து ஆலோசனை வழங்கினர். மாவட்ட கழக அவைத் தலைவர் ஸ்ரீ குமரன், மாவட்ட கழக பொருளாளர் நிர்மல்குமார், மாவட்டக் கழக துணைச் செயலாளர் திருவண்ணாமலை தொகுதி பொறுப்பாளர் தமிழன்னை பாபு மாவட்ட கழக துணைச் செயலாளர் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி பொறுப்பாளர் சங்கர் மாவட்ட கழக துணைச் செயலாளர் வான்மதி ரமேஷ் மாவட்ட துணைச் செயலாளர் சிவகுமார் ஆகியோருடன் மாவட்ட பொது குழு உறுப்பினர் குயிலம் சிவா மற்றும் கட்சி நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் கூட்டணி மற்றும் தேர்தல் பணிகள் உள்ளிட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு பணி செய்வது, அனைத்து கிராமங்களிலும் பூத் கமிட்டி அமைப்பது, உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல்வேறு தீர்மானங்களுடன் ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் ஒன்றிய பொறுப்பாளர் கன்னியப்பன் நன்றி கூறினார்
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்


You must be logged in to post a comment.