திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில்”மாஸ்டர்” படம் வெற்றி பெற படக்குழுவினர் சிறப்பு வழிபாடு.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி, விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு, ஜனவரி 13 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்த்னு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். மாஸ்டர் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸுடன் இணைந்து எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரித்துள்ளது.படத்தின் டீஸர் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், மாஸ்டர் படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கிடையே தினமும் மாஸ்டர் படத்தின் ப்ரோமோவை வெளியிட்டு வருகிறார்கள் படக்குழுவினர்.இந்நிலையில் லோகேஷ் கனகராஜ், அனிருத், அர்ஜூன் தாஸ், ஜெகதீஷ் மற்றும் லல்லு ஆகிய படக்குழுவினர் மாஸ்டர் திரைப்படம் வெற்றி பெற வேண்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்துள்ளனர். அங்கு அவர்கள் எடுத்துக் கொண்ட படத்தையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!