செங்கம் அருகே வீட்டினுள் புள்ளிமான் ஒன்று புகுந்ததால் பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்செங்கம் பகுதி ஜவ்வாது மலையை ஒட்டி அமைந்துள்ளதால் அரிய வகை மான், காட்டெருமை, கரடி, காட்டுப்பன்றி போன்ற வன விலங்குகள் ஏராளமாக புள்ளிமான்உள்ளது.இதனால் வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களில் உள்ள விளைபொருட்களை உண்பதற்காகவும் குடிநீர் தேடியும் கூட்டம் கூட்டமாக மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் வருவது வாடிக்கை.வீட்டின் பின்புறம் படுத்திருந்த புள்ளிமான்இந்நிலையில் மேல்செங்கம் குடியிருப்புப் பகுதிகளில் அழகிய புள்ளிமான் ஒன்று புகுந்ததால் பொதுமக்கள் அதனை விரட்டியதில் சாமுவேல் என்பரது வீட்டில் நுழைந்தது. தொடர்ந்து அதனை வீட்டுக்குள் வைத்துப் பூட்டிய பின், வனத்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். பின்னர் விரைந்து வந்த வனத்துறையினர், புள்ளிமானை பத்திரமாக மீட்டு மேல்செங்கம் வனக்காட்டில் விட்டனர்.

செங்கம் செய்தியாளர் சரவணகுமார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!