இயற்கையை பாதுகாக்கும் நோக்கில் செங்கம் தொகுதி முழுவதும் மரக்கன்றுகள் நடும் விழா;

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்பெண்ணாத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் விஜய் ஏற்பாட்டில் நாவல், கொய்யா, வேம்பு 1000 மரக்கன்றுகளை நடப்பட்டது. நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி கலந்து கொண்டு 100 நாள் வேலை திட்ட பணியாளர்களும் மரக்கன்றுகளை நடவு செய்து தொடக்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில்; இயற்கை அழிந்து வரும் சூழலில் மனித வாழ்வோடு ஒன்றிருக்கும் மரங்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு அழித்து வருகின்றனர். இயற்கை வளங்களுக்கு எதிராக செயல்படுவது வேதனைக்குரியதாகும். இதனை இயற்கையை பாதுகாக்கும் நோக்கில் செங்கம் தொகுதி முழுவதும் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன. தங்கள் பகுதியில் உள்ள பொதுமக்கள் மரங்களை வெட்டுவதை தடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சகுந்தலா ராமஜெயம், ஒன்றியக் குழு உறுப்பினர் விநாயகம், துணைத் தலைவர் விசாலாட்சி வெங்கடேசன் , பெரியப்பட்டு சுப்பிரமணி, திமுக பிரதிநிதிகள் செல்வம் மற்றும் கட்சி முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் சரவணகுமார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!