திருவண்ணாமலை மாவட்டம், அண்ணாமலை மெட்ரிக் பள்ளியில் திரிசாரணன் திரிசாரணி படை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் தலைமையில் தொடங்கப்பட்டது. அண்ணாமலை பள்ளி அறக்கட்டளை உறுப்பினர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். பள்ளி திரிசாரண ஆசிரியர் பிரேம் குமார் அனைவரையும் வரவேற்றார் . மாவட்ட கல்வி வேத பிரகாசம் வருகை தந்து திரிசாரணன் திரிசாரணிகளை உங்கள் சேவை நாட்டுக்கு தேவை கடமையை சிறப்பாக செய்யுங்கள் இந்த கோவிட் காலத்தில் சாரண இயக்கம் செய்த தொண்டு பாராட்டுக்கு உரியது .தொடர்ந்து பணிகள் சிறப்பாக சேவையாற்ற வேண்டும்
மாவட்ட பள்ளி கல்வி துணை ஆய்வாளர் மற்றம் மாவட்ட ரோவர் ஆணையர் குமார் திரிசாரணிகளை வாழ்த்தி பேசினார்.
மாவட்ட செயலாளர் பியூலா கரோலின் திரிசாரணன் திரிசாரணி நடந்த நிகழ்வுகளை சொல்லி இனிமேல் செய்யபோகும் செயல்பாடுகளை பகிர்ந்து கொண்டார்.
மாவட்ட அமைப்பு ஆணையர் திரிசாரணன் படை ஆரம்பிது நடத்துவது என பகிர்ந்து கொண்டார்.
மாவட்ட பயிற்சி ஆணையர் சாரணியம் கலைவாணி திரிசாரணி படை ஆரம்பிது நடத்துவது என பகிர்ந்து கொண்டார்.
மாவட்ட துணை ரோவர் ஆணையர் ரோவர் சுதாகர் சமுதாய தொண்டு எப்படி ஆற்ற வேண்டும் என திரிசாரணன் திரிசாரணிகளுக்கு எடுத்துரைத்தார். இடை இடையே. உற்சாகம் ஊட்டும் வகையில் பாடல்கள் மற்றம் விளையாட்டுக்கள் நடத்தப்பட்டது . பள்ளி திரரிசாரணி ஆசிரியை சுதா நன்றி கூறினார்.


You must be logged in to post a comment.