வீர போயர் சமுதாய முன்னேற்ற சங்கம் சார்பில் இலவச சட்ட பயிற்சி வகுப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தனியார் திருமண மண்டபத்தில் வீர போயர் சமுதாய முன்னேற்ற சங்கம் சார்பில் ஒரு நாள் இலவச சட்ட பயிற்சி வகுப்பு சிறப்பாக நடைபெற்றது கூட்டத்திற்கு மாநில பொருளாளர் மாரியப்பன் தலைமை தாங்கினார் மாநில பொது செயலாளர் தங்கதுரை அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அக்னி செல்வராசு கலையரசன் வெங்கட்ராமன் ஷோபனா திருப்பத்தூர் வழக்கறிஞர் லோகநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு இந்திய அரசியலமைப்பு சட்டம, தகவல் அறியும் உரிமை சட்டம் ஊழலுக்கு எதிராக எவ்வாறு சட்டங்கள் உபயோகிப்பது பொது மக்களுக்கு சட்ட உதவிகளை எவ்வாறு வழங்குவது செங்கல் ,சூளை கல்குவாரி மற்றும் இதர தொழில் ரீதியான சட்ட ரீதியாக எவ்வாறு கையாள்வது என்பது குறித்து சிறப்பாக எடுத்துக் கூறி விழிப்புணர்வு வழங்கினார்கள். மாநிலத் தலைவர் சி.கே.தீனா போயர், ஆகியோர் சொன்னார் சட்ட ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் விழிப்புணர்வு குறித்து சிறப்புரையாற்றினார். பின்னர் உயிரே போயர் சமுதாய முன்னேற்ற சங்கத்தின் சார்பில்ரூ.2 ஆயிரம் வீதம் 10க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கி கௌரவித்தனர். கூட்டத்தில் மாநில பொது செயலாளர் தங்கதுரை மாநில துணைத்தலைவர் செங்குட்டுவன், மாநில பொறுப்பாளர் அன்பழகன் செங்கம் பகுதி ஊராட்சி மன்ற தலைவர்கள், பொறுப்பாளர்கள் வேலு, முருகன், தனபால், சூர்யா, மணி, ஏ.மணி, வெங்கடேசன், சுரேஷ் உட்பட1000க்கும் மேற்பட்ட வீரபோயர் சமுதாய இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!