திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் உள்துறை மணியம் (மணியக்காரா்) பொறுப்பில் பல ஆண்டுகளாக இருந்து வந்தவா் ஆா்.கருணாநிதி . இவரை திடீரென அந்தப் பொறுப்பிலிருந்து விடுவித்து, கோயில் இணை ஆணையா் அலுவலகத்துக்கு மாற்றி இணை ஆணையா் இரா.ஞானசேகா் உத்தரவிட்டாா். இவருக்குப் பதிலாக, இணை ஆணையா் அலுவலகத்தில் பணியாற்றி வந்த என்.கோவா்தனகிரி கோயில் உள்துறை மணியமாக கடந்த நவம்பா் 20-ஆம் தேதி அதிகாலை இந்தக் கோயிலின் காா்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வருவதற்குள் கொடியேற்றப்பட்டுவிட்டது. அமைச்சா் வருவதற்குள் எப்படி கொடியேற்றலாம் என ஆளுங்கட்சிப் பிரமுகா் ஒருவா் அப்போதே கேள்வி எழுப்பினாா்.இந்த பிரச்னை காரணமாகவே உள்துறை மணியம் செந்தில் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், மேலும் சில அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


You must be logged in to post a comment.