டெல்லி விவசாயிகள் போராட்டத் துக்கு ஆதரவு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் மறியல் போராட்டம் நடந்தது.மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில்
விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செங்கத்தில் மறியல் போராட்டம் நடந்தது.செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகில் நடந்த மறியலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் சர்தார் மற்றும் வட்ட செயலாளர் லட்சுமணன் ஆகியோர் தலைமை வகித்தனர். மறியலில் ஈடுபட்டோர் வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக்கோரியும், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் கோஷங்களை எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தின் போது டெல்லியில் போராடுகின்ற விவசாயிகள் ஜனநாயக ரீதியான போராட்டத்தை மதித்து பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் விவசாயிகளுக்கு எதிரான புதிய 3 வேளாண் சட்டங்களை த மத்திய மாநில அரசு திரும்பப் பெற வேண்டும் இன்று வருஷங்கள் எழுப்பப்பட்டது. ஒன்றியக்குழு சுப்பிரமணியன், மாவட்ட நிர்வாகக்குழு மாதேஸ்வரன், மாவட்ட குழு நகர செயலாளர் பச்சையப்பன், ஜவ்வாதுமலை ஒன்றிய செயலாளர் மணி, வட்டக் குழு நடராஜன், அப்துல் மஜித் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.மறியலில் ஈடுபட்ட 100 பேரை போலீஸார் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்கவைத்து பின்பு விடுவித்தனர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்


You must be logged in to post a comment.