பணிநிரந்தரம் செய்ய வேண்டி நாக்கில் தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிசாமி படத்தை வரைந்த பகுதிநேர ஆசிரியர்.

திருவண்ணாமலை அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த செல்வம் சிவனார்தாங்கல் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.இவர். பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டி தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிசாமி உருவத்தை தன் நாக்கில் 20 நிமிடங்களில் வாட்டர் கலர் கொண்டு வரைந்துள்ளார்.செல்வம் அவர்கள் கூறுகையில் – முன்னாள் முதல்வர் அம்மா அவர்களால் 2011-12ஆம் கல்வியாண்டில் 16549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.10 கல்வி ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறோம். தற்போது 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர் இருக்கிறோம் . வாழ்வாதாரம் இன்றி அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கஷ்டப்படுகிறோம். எனக்கு வேற வழி தெரியல… மாண்புமிகு தமிழகமுதல்வர் அவர்கள் தாய் உள்ளத்துடன் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறினார்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!