வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.மாவட்ட செயலாளர் வேண்டுகோள்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக உட்பட்ட திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், செங்கம் , போளூர் ஆகிய சட்டசபை தொகுதிகளில் உள்ள இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிர் குழு கொண்ட பூத் கமிட்டி அமைப்பது குறித்து வாக்காளர் பெயர் பட்டியல் சேர்த்தல் , நீக்குதல் , திருத்தம் செய்தல் சம்பந்தமாக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முதல்வர் பழனிசாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் உத்தரவின்பேரில் நடைபெற்றது இதைதொடர்ந்து செங்கம், அன்வராபாத் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்திற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், மாவட்ட ஆவின் தலைவருமான அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பேசியபோது வரும் 2021 சட்டசபை தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய ஒன்றிணைந்து அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று பேசினார்.பின்னர் மாற்று கட்சியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட செயலாளர் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களை மாவட்ட செயலாளர் சால்வை அணிவித்து வாழ்த்தினார். கூட்டத்தில் மகரிஷி பள்ளி தாளாளர் மனோகரன், மாவட்ட துணை செயலாளர் அமுதா அருணாச்சலம், தலைமை, கழக பேச்சாளர் வெங்கட்ராமன், வழக்கறிஞர் தினகரன், செல்வம் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் கே கே மணி , நகர அம்மா பேரவை செயலாளர் குமார், தனஞ்செயன், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் பத்மா முனிகண்ணு, முன்னாள் கவுன்சிலர் கலையரசி சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் , செங்கம் சரவணகுமா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!