செங்கம் அம்மா நகரும் நியாயவிலை கடை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே முறையாறு கிராமத்தில் அம்மா நகரும் நியாயவிலைக்கடை தொடக்க விழா நடந்தது. இதை செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தொடங்கி வைத்தார். நாச்சிப்பட்டுகூட்டுறவு சங்கத்துக்கு உட்பட்ட முறையாறு பகுதியில் அம்மா நகரும் நியாயவிலைக்கடை தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு. நாச்சிப்பட்டு கூட்டுறவு சங்க தலைவர் அன்பு என்கிற அன்பழகன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் சூரியலட்சுமி சங்கர்மாதவன் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றுப் பேசினார் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி கலந்துக்கொண்டு அம்மா நகரும் நியாயவிலைக்கடை தொடங்கிவைத்தார். முடிவில் சங்க இயக்குனர் வெங்கடேசன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கரியமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவருமான ராமமூர்த்தி முறையாறு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் வேல்முருகன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நேரு மற்றும் சங்க இயக்குனர்கள் மகளிர்குழுவினர் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!