குப்பனத்தம் அணையை திறக்கக்கோரி ஏரியில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மற்றும் அதை சுற்றியுள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், பருவ மழையை நம்பி, நெல் சாகுபடி செய்துள்ளனர். ஆனால், இதுவரை போதுமான அளவுக்கு, பருவமழை பெய்யாததால், பயிர்கள் கருகி வருகின்றன. இதனால், சில கிராமங்களில், விவசாய பயிர்களை கால்நடைகளை விட்டு மேய்த்து வருகின்றனர். இந்நிலையில், ஜவ்வாதுமலையில் பெய்துள்ள மழையால் அடிவாரத்தில், 59 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள குப்பனத்தம் அணையில், 43 அடி அணை நீர் நிரம்பி உள்ளது. இந்த நீரை பாசனத்துக்கு, அணையை ஒட்டியுள்ள, 47 ஏரிகளுக்கு திறந்து விட்டால், ஏரிகளை ஒட்டியுள்ள கிராமப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, கிணறு மூலம், பாசன வசதி செய்ய ஏதுவாக இருக்கும். எனவே, அணையிலிருந்து நீரை திறந்துவிட, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசை வலியுறுத்தி, விவசாயிகள் தோக்கவாடி ஏரியில் இறங்கி நின்று, நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!