- பாசறை மாநில செயலாளர் பரமசிவம் புகழாரம்.
தி.மலை தெற்கு மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் கூட்டம் தி.மலை வேங்கிக்கால் ஆண்டாள் சிங்காரவேலு மண்டபத்தில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதைத்தொடர்ந்து இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம் கலந்து கொண்டு பேசியதாவது திருவண்ணாமலை மாவட்டம் அதிமுக எக்கு கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆற்றல் மிகு இளைஞர்கள் பாசறையில் இணைந்துள்ளார்கள். பொது வாழ்வுக்கு வந்தால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் வெறும் அறிக்கை கொடுக்கும் தலைவராக உள்ளார்..வாரிசு அரசியல் என்றால் திமுக தான் .ஆனால் அதிமுகவில் எம்ஜிஆர் ஜெயலலிதா அவர் இறந்த பின் யார் அடுத்த வாரிசு என்று சொல்லவில்லை .இவ்வாறு பேசினார். இதில் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் நைனாகண்ணு, துணை செயலாளர் அமுதா அருணாச்சலம், நகர செயலாளர் செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயசுதா, அரங்கநாதன், சுரேஷ்குமார் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நாராயணன், மாணவரணி செயலாளர் சிவக்குமார், மாவட்ட அமைப்பு ஓட்டுநர் அணி செயலாளர் சுனில் குமார், நகராட்சி முன்னாள் கவுன்சிலர் போர் மன்னன் ராஜா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கலியபெருமாள் பாசறை செயலாளர் மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் குமாரசாமி நன்றி கூறினார்


You must be logged in to post a comment.