திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலை பள்ளி வளாகத்தில் செங்கம் இந்தியன் ரெட் கிராஸ் வருடாந்திர 2019-20 பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு செங்கம் வட்டாட்சியர் மனோகரன் தலைமை தாங்கினார். செங்கம்
ரெட் கிராஸ் தலைவர் வெங்கடாஜலபதி அனைவரையும் வரவேற்று பேசினார். செங்கம் ரெட் கிராஸ் செயலர் தனஞ்செயன் செயல் அறிக்கை வாசித்தார். பொருளாளர் ஆதவன் வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தார். முன்னதாக செங்கம் வட்டாட்சியர் மனோகரன் குத்து விளக்கை ஏற்றி வைத்து பேசினார். பொதுக்குழு கூட்டத்திற்குமாவட்ட ரெட்கிராஸ் தலைவர் இந்திரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் இயற்றப்பட்டது. அதனை நிர்வாக செயலாளர் சர்தார் ரூஹுல்லா வாசித்தார்.மாவட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன், ராமகிருஷ்ணா பள்ளி தாளாளர் பாண்டுரங்கன், வழக்கறிஞர் செல்வம், அசோக்குமார், கவியரசு ,,காந்தி, தலைமையாசிரியர் ,பழனி, சரவணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்


You must be logged in to post a comment.