செங்கம் ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில், எக்ஸ்னோரா புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்ட எக்ஸ்னோரா சார்பில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நாச்சிபட்டு ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. விழாவிற்கு எக்ஸ்னோரா புரவலர் மற்றும் ஆலோசகருமான அக்ரி.எஸ்.வெங்கடாஜலபதி தலைமை தாங்கினார். செங்கம் எக்ஸ்னோரா தலைவர் தனஞ்ஜெயன் அனைவரையும் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியின் முன்னதாக செங்கம் வட்டாட்சியர் ப.வெங்கடேசன் தலைமையில் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நடைபெற்றது. பின்னர் மாவட்ட எக்ஸ்னோரா தலைவர் இந்திர ராஜன் புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தி சிறப்புரையாற்றினார். நிகழ்வில் எக்ஸ்னோராமாவட்ட தலைவர் இந்திர ராஜன் முன்னிலையில் புதிய நிர்வாகிகள், ஆலோசகராக அக்ரி.எஸ்.வெங்கடாசலபதி, தலைவராக ம.தனஞ்ஜெயன், துணைத் தலைவர் கலியமூர்த்தி பழனி ,அன்வர் பாஷா, பொருளாளராக அசோக் குமார் செயலாளராக உதயசங்கர், இணைச்செயலாளர் முரளிதரன், கலிமுல்லா, விஜயகுமார், இனியவன் இயக்குனர்கள் ராஜசேகரன், வில்சன் ரஜினிகாந்த், ராம்குமார், ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.பின்னர் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விழாவில் மாவட்ட எக்ஸ்னோரா பொதுச் செயலாளர் பாஸ்கர் ,மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ,வெங்கடேச பெருமாள் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் செங்கம் எக்ஸ்னோரா செயலாளர் உதய சங்கர் நன்றி கூறினார்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!