செங்கம் அருகே கீழ்ராவந்தவாடி கிராமத்தில் காம சிற்பங்கள் நிறைந்த குளம் ரூபாய் 17 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை தொல்லியல் துறை அதிகாரி நேரில் ஆய்வு செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு பகுதி வரலாற்று சிறப்புமிக்க 22 குளங்கள் உள்ளது. அவற்றில் கீழ்ராவந்தவாடியில் 45 சென்ட் பரப்பளவில் சிற்பங்கள் நிறைந்த குளம் உள்ளது இந்த குளத்தை “அம்மா குளம்” என்று பொதுமக்கள் செல்லமாக அழைப்பது உண்டு .இந்த குளத்தை சுற்றிலும் உள்ள படிக்கட்டுகளில்
காமசூத்திரத்தை குறிக்கும் வகையில் அரிய சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. தொல்லியல் துறைக்கு சொந்தமான இயக்கத்தை வருவாய்த்துறை பராமரித்து வருகின்றது. தற்போது குளத்தின் படிக்கட்டுகள் உடைந்து சேதம் அடைந்துள்ளன. இந்த அரிய சிற்பங்கள் நிறைந்த குளத்தை சீரமைக்க வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி சாமியிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து பழமையான இந்த குளத்தை பாதுகாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் ரூ. 17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிதிலமடைந்த சிற்பத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை சென்னை தொல்லியல் துறை அதிகாரி ராஜேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் முருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
செங்கம் செய்தியாளர் சரவணகுமார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









