திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கலசப்பாக்கம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட காஞ்சி, வன்னியனூர் பகுதியில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட காஞ்சி, வன்னியனூர் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை நாட்களுக்கான உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் புதுப்பாளையம், கலசப்பாக்கம் தொகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு புதுப்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் மே மாதம் 2020ஆம் ஆண்டு கோடை விடுமுறை நாட்களுக்கான உலர் உணவுப் பொருட்களை வழங்கினார்.மேலும் கலசப்பாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட 11 அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு அவர் பொன்னாடை போர்த்தி பரிசுகளை வழங்கினார்.
செங்கம் செய்தியாளர், சரவணகுமார்


You must be logged in to post a comment.