திருவண்ணாமலை மாவட்டம்,செங்கத்தில் இந்திய ஐனநாயக
வாலிபர் சங்கத்தின் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிசெங்கம் தாலூக்கா செயலாளர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.மு.மாவட்ட செயலாளர்இலட்சுமணன், வெங்கடேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏழை எளியவர்களுக்கு, அனைத்து தரப்பு மக்களுக்கும், ஆட்டோ ஓட்டுனர்ளுக்கும், 500க்கும் மேற்பட்டோருக்கு கபசுர குடிநீர் நீர் வழங்கப்பட்டது. நிகழ்வில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகள் வடிவேல் , சுந்தரேசன் , அஸ்வின் மற்றும் செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.நிகழ்வின் சேவையை குறித்து பொதுமக்கள் மற்றும் சிறுவணிகர்கள் உள்ளிட்டோர் பாராட்டினார்கள்.
செங்கம் செய்தியாளர், சரவணக்குமார்


You must be logged in to post a comment.