திண்டுக்கல் மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் எரியாத தெருவிளக்குகளால் அவதிபடும் பொதுமக்கள்.!
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள பாளையங் கோட்டை கிராமத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரே ஒரு தனியார் பேருந்தும் அருசு பேருந்தும் மட்டுமே! இயக்கப் படுகிறது. மற்ற நேரங்களில் அந்த ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் வெளியூர்களுக்கு சென்று விட்டு வரும் பொழுது தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாளையங் கோட்டை கிராமத்திற்கு நடந்தேதான் செல்லவேண்டும். இன்னிலையில் இரவு நேரங்களில் நடந்து செல்லும் பொழுது அப்பகுதி முழுவதும் தோட்டம் வெளிக் காடுகளாக இருப்பதால் சாலையோரம் புதர் மண்டிக்கிடப்பதாலும் தற்போது மழை தூரல் காலமாக இருப்பதால் கடும் விஷசந்துக்கள் வெதுவெதுப்பான சூழலுக்காக சாலையில் ஊரித்திரியும் நிலை உள்ளதால் நடந்து செல்லும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விசஷந்துக்களின் தீண்டுதலால் உயிழக்கும் அபாயம் ஏற்படுவதோடு சமூக விரோதிகள் இருட்டை பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடும் சூழலும் உள்ளது.ஊராட்சி நிர்வாகத்தால் நெடுஞ்சாலையில் இருந்து தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ள போதும் விளக்குகள் எரிவதில்லை நீண்ட நாட்களாக ஊராட்சி நிர்வாகம் அவைகளை கண்டு கொள்ளாத நிலை தொடர்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடனும் கவணமாகவும் இரவு நேரங்களில் கடந்து செல்லும் நிலையில் உள்ளனர்.
ஆகவே, ஏதேனும் அசம்பாவிம் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகள் மீது அக்கறை கொண்டு உடனடியாக கவணம் செலுத்தி எரியாமல் பெயரளவில் காட்சிப் பொருளாக மின் கம்பத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் மின் விளக்குகளை சரி செய்து தந்து உதவுமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









