சென்னையில் அமைந்துள்ள செம்மொழிப் பூங்காவில் மலர்க் கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
மலர்க் கண்காட்சியைத் தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், செம்மொழிப் பூங்காவை அலங்கரித்துள்ள வண்ண வண்ண மலர்களை பார்த்து ரசித்து வருகிறார்.
சென்னையில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக செம்மொழிப் பூங்காவில் இன்று மலர்க் கண்காட்சி தொடங்கியிருக்கிறது. நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற குளிர் பிரதேசங்களில் மட்டும் நடத்தப்பட்டு வந்த மலா்க் கண்காட்சி, முதல் முறையாக கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னையில் நடத்தப்பட்டது.
அது முதல் தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்த ஆண்டும் மலர்க் கண்காட்சி தொடங்கியிருக்கிறது. தமிழ்நாடு தோட்டக் கலைத் துறை சாா்பில், நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களிலிருந்து மலர்கள் வரவழைக்கப்பட்டு மலர்க்கண்காட்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
செம்மொழிப் பூங்காவில் 50 வகை மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 15 லட்சம் தொட்டிகளில் செடிகள் வளர்க்கப்பட்டு, சுமார் 20 வகையான வடிவங்கள் மலர்களாலேயே உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மலர்க்கண்காட்சிக்கான நுழைவுச் சீட்டு இணையதளம் வாயிலாகவும் பூங்காவின் நுழைவாயிலிலும் பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.