ஒழுக்கமில்லா கல்வி காகித பூ போன்றது அது மணம் தராது.. கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேரசிரியர் பேச்சு..

இராமநாதபுரம், ஆக.7- ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நன்னெறி கல்வி மற்றும் தீனியாத் அமைப்பு சார்பில் ஒழுங்குமுறை நுட்பம், நேர்மையான அணுகுமுறை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமை தாங்கினார். 

கல்லூரி அரபிக் துறை தலைவர் கல்லூரியின் நன்னெறி கல்வி மற்றும் தீனியாத் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்மொகைதீன் அப்துல் காதர் வரவேற்றார். திருச்சி ஜமால் முஹமது கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் அமிருதீன் ஹசானி  பேசுகையில், செல்வந்தர் பலர் ஒழுக்கத்தை கடைப்பிடிக்காததால் சமூகத்தில் ஒதுக்கப்பட்டு நிம்மதி இழந்து வாடுகின்றனர். உயர்கல்வி கற்றோரும், உயர் பதவி வகிப்போரும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்காததால் சமூகத்தில் தாழ்நிலையை அடைந்து விடுகின்றனர். செல்வம், அந்தஸ்து குறைந்த நிலையில் உள்ளோர் தங்கள் ஒழுக்கமான வாழ்க்கையால் உயர் நிலையை அடைகின்றனர். மாணவர்களாகிய நீங்கள் நேர்மை, சமூக பொறுப்பு கொண்டோராக வளர வேண்டும். ஆசிரியர்கள், பெரியோர் வழிகாட்டும் பழக்க வழக்கங்களை பின்பற்றி, அறிவு, திறமையால் சிறந்த சிந்தனை கொண்டோராக செயல்பட வேண்டும். ஒழுக்கமில்லா கல்வி காகித பூ போன்றது. அது மணம் தராது.  ஒழுக்கமில்லா கல்வி பயில்வதால் எவ்வித பயனுமில்லை. என்வே தான் சமுதாயத்தில் சிறந்த முன்னோர் ஒழுக்கத்துடன் கூடிய சிறந்த ஆசிரியர்களிடம் கல்வி தேடினர் என்றார். இயற்பியல் துறை பேராசிரியர் ஈவன்ராஜ் நன்றி கூறினார். அனைத்து துறை மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!