கீழக்கரையில் அமைந்துள்ள தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவியருக்கு இன்று (15/07/2019) தன்னம்பிக்கை உரை நிகழ்த்தப்பட்டது.
கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவியும் மனநல ஆலோசகரும், வில் மெடல்ஸ் உலக சாதனை அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் கலைவாணி மற்றும் அந்நிறுவனத்தினுடைய முதன்மைச் செயலாளர் டாக்டர் தஹ்மிதா பானு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மதியம் 3 மணிக்கு துவங்கிய இந்நிகழ்வு 3.40 மணியளவில் நிறைவுபெற்றது. பெண்கள் தங்களுடைய பாதுகாப்பை எப்படி பலப்படுத்திக் கொள்ள வேண்டும், தங்கள் உணர்வு சார்ந்த பிரச்சினையிலிருந்து எப்படி விடுவித்துக் கொள்ள வேண்டும், அவர்களின் நட்பை எப்படி பேண வேண்டும், அவர்கள் தோழிகளை எப்படி வழிநடத்த வேண்டும் அவர்கள் சமுதாயத்தில் உள்ள வாய்ப்புகளை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும், தான் கற்ற கல்வியின் பயனை எப்படி வெளிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கருத்துக்கள் அடங்கிய தன்னம்பிக்கை உரையை கல்லூரியின் முன்னாள் மனைவி கலைவாணி வழங்கினார்.
இந்த நிகழ்வில் 50ற்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வானது அந்த கல்லூரியில் அமைந்துள்ள விரிவுரையாளர் அரங்கத்தில் நடைபெற்றது இந்த நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாட்டையும் தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் கணிப்பொறியியல் துறையின் விரிவுரையாளர் ராதா செய்திருந்தார்.





You must be logged in to post a comment.