இராமநாதபுரம் சரக காவல் துறை துணை தலைவர் என்.காமினி, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் உத்தரவுப்படி, இராமநாதபுரம் மாவட்ட ஊர்க்காவல்படையில் காலியாக உள்ள 63 பணியிடங்களுக்கான (ஆண்கள் 55, பெண்கள் 8) தேர்வானது, இராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் 23.02.2019- நடைபெற்றது. இத்தேர்வில் 1033 விண்ணப்பதாரர்கள் (ஆண்கள் 952, பெண்கள் 81) கலந்து கொண்டனர்.
இத்தேர்வானது, ராமநாதhரம் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் எஸ்.வெள்ளைத்துரை, காவல் கண்காணிப்பாளர் ஆ.அறிவழகன், ராமநாதபுரம் ஊர்க்காவல் படை வட்டாரத் தளபதி டாக்டர்.ஆ.பு.ஜபருல்லா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. விண்ணப்பதாரர்களின் உடற்கூறு தேர்வு, சான்றிதழ் சரிபார்க் 2ப்பட்டு, ஊர்க்காவல்படை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.






You must be logged in to post a comment.