இராமநாதபுரத்தில் 10 நாளில் ரூ.1.20 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்..

இந்திய தேர்தல் ஆணைய அறிவிப்பு படி தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்.18 ல் தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் மார்ச் 10 மாலை முதல் நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து மார்ச் 13 முதல் தேர்தல் பறக்கும் படை, நிலைத்த கண்காணிப்பு குழு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மார்ச் 13 முதல் மார்ச் 22 வரை ராமநாதபுரம், பரமக்குடி , திருவாடானை, முதுகுளத்தூர் தொகுதிகளில் 86 இடங்களில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் ரூ.1,12,91,516 ரொக்கம் (இதில் ரூ.28.17 லட்சம் வெளிநாட்டு பணம் உள்பட) மற்றும் அரிசி மூடை, ரெடி மேடு ஆடைகள் உள்ளிட்ட இதர பொருட்கள் ரூ.6,93,240 என ரூ.1,19,84,756 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 22.3.2019 மட்டும் 14 வாகன சோதனையில் ரூ.17,28, 900 மற்றும் ரூ.16, 480 மதிப்பில் இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!