விதை பந்து தூவும் பணியில் கீழக்கரை தவ்ஹீத் ஜமா அத்..

“நீரின்றி அமையாது உலகு”.. ஆம் நீர் தான் மனிதன் வாழ அடிப்படை விசயங்களில் முக்கியமான ஒன்றாகும்.  ஆனால் இன்றைய நவீன உலகில் தண்ணீர் மிகவும் அரிதான ஒன்றாக மாறி வரும் நிலை, காரணம் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு மாட மாளிகைகளாக மாற்றியதன் விளைவு.

ஆனால் வரும் தலைமுறை தழைக்க நீர் அவசியம் என்பதை, தற்பொழுது உணர ஆரம்பித்துள்ளது சமுதாயம்.  அதன் ஒரு பகுதியாக மரம் நடுவதன் மூலம் மழை வளத்தை அதிகரிக்க முடியும் என்ற வகையில் விதை பந்துகளை வீசும் பணியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு கிளை இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுவாக பார்வையில் அதிகம்படாத பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு அதற்கு தண்ணீர் ஊற்றி உரமிட்டு பராமரிப்பது என்பது சாத்தியப்படாது. எனவே சாணம், மணல், விதை ஆகியவற்றை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து உருண்டைகளாக பிடித்து அதை காயவைத்து காட்டு பகுதிகளில் வீசும் பணியை கையில் எடுத்து செயல்படுத்தி வருகிறார்கள். இதனால் விதையில் இருந்து முளை வந்து எந்த வித பராமரிப்பின்றி செடி வளரத் தொடங்கிவிடும். முதல் கட்டமாக கீழக்கரையில் இருந்து சிக்கல் பகுதிவரை 500 விதைப்பந்துகள் விதைக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!