கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையின் சார்பாக மின்னியலில் மென்பொருள் பயன்பாடு பற்றிய இருநாட்கள் கருத்துப்பட்டறை கல்லூரி டீன் முனைவர் முஹமது ஜஹூபர் மற்றும் முதல்வர் முனைவர் அப்பாஸ் முகைதீன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவர் முனைவர்.சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார்.
கல்லூரி டீன் தனது தலைமையுரையில் தொழில்துறை மற்றும் பொறியியல் நிறுவனங்களில் PLC & SCADA ( Programmable Logic Controller & Supervisory control and data acquisition வின் பயன்பாடுகளையும் அதன் முக்கித்துவத்தையும் மாணவர்களிடம் விளக்கிக் கூறினார். மேலும் அயல்நாடுகளில் வேலைவாய்ப்பை பெறுவதற்கு PLC & SCADA ( Programmable Logic Controller & Supervisory control and data acquisition மென்பொருள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் எடுத்துரைத்தார்.

இன்றைய நவீன உலகத்தில் வளர்ந்த மற்றும் வளர்ந்த வரும் நாடுகளில் இந்த மென் பொருள் உற்பத்தி சார்ந்த தொழில் துறையில் அதிகமாக பயன்படுத்தப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உற்பத்தி திறனை அதிகரிக்கவும், உற்பத்தியில் ஏற்படும் தாமதம் மற்றும் தடங்கலை குறைக்கவும், தவிர்க்கவும் முடியும். கல்லூரி முதல்வர் தனது தலைமையுரையில் மின்னியல் துறையில் கணினியின் பயன்பாட்டினால் நேரத்தை சேமித்து உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. மின்பயன்பாடு குறைவாக உபயோகபடுத்தலாம். மின்சேமிப்பு நிலையங்களில் கணினியின் பயன்பாடு முக்கியபங்கு வகிக்கிறது என தெரிவித்தார்.
சிறப்பு விருந்தினராக சென்னை PROFILIC அமைப்பின் மண்டல மேலாளர் ராஜபாண்டியன் மற்றும் சுரேஷ்குமார் ப்ரித்விராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மின்னியல் துறையில் PLC & SCADA ( Programmable Logic Controller & Supervisory control and data acquisition உதவியோடு எவ்வாறு பாதுகாப்பான உற்பத்தியை பெருக்குவது என்பதை செயல்முறை விளக்கத்துடன் விளக்கி கூறினார். தற்போதைய மின்னியல் துறைக்கு தேவையான சர்க்யூட்டை எவ்வாறு கணினியின் உதவியுடன் மிக எளிதாக செய்வது என்பதையும் மாணவர்களின் சந்தேகங்களுக்கும் தகுந்த விடையளித்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை பேராசிரியர் அகமது ஹூசைன் ஆசிஃப் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைப் பேராசிரியர்கள் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் நஜ்முதீன் ஆகியோர் செய்திருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









