இன்று 23/10/2020 தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலை விற்கும் கடைகளை ஆய்வு செய்து காவல்துறை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இராமநாதபுரம் மற்றும் கீழக்கரை பகுதியில் கீழக்கரை சார்பு ஆய்வாளர்கள் ரமேஷ் தலைமையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பல இடங்களில் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த செயலை இராமநாதபுரம் மாவட்ட SDTU தொழிற்சங்கம் மாவட்ட நிர்வாகம் பாரட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்த நடவடிக்கையை இத்தோடு நிறுத்திவிடாமல் தொடரும் கடைகளுக்கு அபாதாராம் விதிக்க வேண்டும். இதனால் இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் கீழக்கரை முழுவதும் பள்ளி கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்களை போதைக்கு அடிமையாவதில் இருந்து பாதுகாக்கலாம்.
இந்த நடவடிக்கையை மாவட்ட
காவல்துறையும், நகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கீழக்கரை பொதுமக்கள் சார்பாக முஸ்தாக்அஹமது, மாவட்ட தலைவர் SDTU. இராமநாதபுரம் மாவட்டம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இத்தகவலை இராமநாதபுரம் மாவட்ட SDTU தொழிற் சங்கம் ஊடக அணியை சார்ந்த கீழைஅஸ்ரப் மற்றும் முஹம்மது பாக்கர் ஆகியோர் வெளியிட்டனர்.


You must be logged in to post a comment.