“திருத்தப்பட்ட கருப்புச் சட்டங்களும் (UAPA, NIA), மக்களை அகதிகளாக்கும் தேசிய குடியுரிமை பதிவேடு“ என்ற தலைப்பில் SDPI வழக்கறிஞர் அணி நடத்திய சட்டக்கருத்தரங்கம்..

இன்று (29/09/2019) மாலை ஹோட்டல் பிரசிடென்ட்டில் SDPI வழக்கறிஞர் அணி சார்பாக ” திருத்தப்பட்ட கருப்புச் சட்டங்களும் (UAPA, NIA), மக்களை அகதிகளாக்கும் தேசிய குடியுரிமை பதிவேடும் (NRC) என்ற தலைப்பில் சட்டக் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கிற்கு வழக்கறிஞர் அணி மாநிலத் தலைவர் A.ஜஹாங்கீர் பாதுஷா தலைமை வகித்ததார்.  இந்த கருத்தரங்கினை வழக்கறிஞர் அணி மாவட்டத் தலைவர் A.சையது அப்துல் காதர், வரவேற்புரை வழங்கி துவக்க,#SDPI_கட்சி மதுரை மாவட்டத் தலைவர் A.முஜிபுர் ரஹ்மான் மற்றும் மதுரை மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

“தேசிய குடியுரிமை பதிவேட்டின் பாரபட்சங்கள் குறித்தும், சொந்த மக்களையே அகதிகளாக்கும் அதன் தன்மையைப் பற்றியும் SDPI வழக்கறிஞர் அணி மாநில துணைத்தலைவர் S.A.S.அலாவுதீன் கருத்துரை வழங்கினார்.

தனி நபர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளை நசுக்கும் வகையிலான கருப்புச்சட்டமானUAPA மற்றும் அதே மாநில காவல்துறையின் அதிகாரங்களையும் உரிமைகளையும் பறிக்கும் வகையில் NIA விற்கு வரம்பில்லாத அதிகாரங்களை வழங்கும் சட்டத் திருத்தங்களின் அபாயங்களை பற்றி NCHRO வின் மாநிலத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான பா.மோகன் உரை நிகழ்த்தினார். இறுதியாக வழக்கறிஞர் அணி மாவட்டத் செயலாளர் A.முகமது யூசுப் நன்றியுரை வழங்கினார்.

இந்த கருத்தரங்கில் பல்வேறு வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்..

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!