CAAக்கு எதிராக SDPI சார்பில் மண்டபத்தில் கண்டன பொதுக்கூட்டம்..

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய மக்கள் பதிவேடு சட்டங்களை கண்டித்து எஸ்டிபிஐ., கட்சி சார்பில் இராமநாரபுரம் மாவட்டம் மண்டபத்தில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்  நகர் தலைவர் ஏ.முஹம்மது சுலைமான் தலைமை வகித்தார். நகர் பொருளாளர் எஸ்.அபுலா (எ) ஷேக் அப்துல்லா வரவேற்றார். மாவட்ட தலைவர் எம்.ஐ.நூர் ஜியாவுதீன், மண்டபம் முஹையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் டிரஸ்ட் தலைவர் எம்.ஷாஜகான் மரைக்காயர், எஸ்டிஐபி., கட்சி மாவட்ட பொதுச்செயலர் எஸ்.பரக்கத்துல்லாஹ், இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் எஸ்.நியாஸ் கான், தொகுதி செயலர் எஸ்.ஏ.எஸ்.செய்யது அலி கான், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் எம்.முஹம்மது மன்சூர், இராமேஸ்வரம் நகர் தலைவர் எல்.கே.இம்ரான் கான், எஸ்டிபிஐ., மண்டபம் நகர் துணைத் தலைவர் எஸ்.அப்துல் ரஹ்மான், நகர் செயலர் எம்.அப்துல் ஹாலிக், நகர் இணை செயலர் எம்.சகுபர் சாதிக், நகர் குழு உறுப்பினர்கள் எம்.முஹம்மது புகாரி, ஜெ. முகமது ரிஸ்வான், மண்டபம் நகர் (வடக்கு) கிளை தலைவர் ஏ.செய்யது சித்திக், மண்டபம் நகர் (கிழக்கு) கிளை தலைவர் பி.சல்மான் கான், மண்டபம் சேது நகர் தலைவர் எம்.முஹம்மது யாசர், மண்டபம் நகர் (மேற்கு) தலைவர் எஸ்.அசாருதீன் முன்னிலை வகித்தனர். எஸ்டிபிஐ., கட்சி மாநில பொதுச்செயலர் பி.அப்துல் ஹமீது, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மாநில துணை தலைவர் ஏ.காலித் முஹம்மது, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஏ.சவுக்கத் அலி உஸ்மானி, விம் இயக்க மாநில தலைவர் எஸ்.நஜிமா பேகம் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். மண்டபம் நகர் குழு உறுப்பினர் எஸ். நாசர் கான் நன்றி கூறினார்..

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!