திருச்சி மாநகரில் இன்று (21/10/2018) எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக அனைத்து சமுதாயத்திலும் உள்ள ஒடுக்கப்பட்டவர்களுக்காக எழுச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் இந்தியாவில் அனைத்து சமுதாய தலைவர்களும் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்கள்.
மேலும் இந்த மாநாட்டில் தீவிரவாதத்தாலும், தீவிரவாதிகளாலும், ஜாதி சமயத்தின் பேரால் கொல்லப்பட்டவர்களின் பெயர்களில் நினைவு கூறும் விதமாகவும், கௌரவிக்கும் விதமாகவும் அரங்கங்கள் அமைக்கப்பட்டடிருப்பது குறிப்பிடதக்கது. உதாரணமாக காந்தியடியகள் அரங்கம், கெளரி லங்கேஷ் அரங்கம் போன்றவையாகும்.
இந்த மாநாட்டிற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் மக்கள் குவிந்துள்ளனர். கீழக்கழைரயில் இருந்தும் 10 வேண்கள் மற்றும் 5கும் மேற்பட்ட கார்களில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஏராளமானோர் மாநாட்டுக்காக சென்றனர். மாநாட்டுக்கு சென்றவர்களுக்கு சிற்றுண்டி உட்பட அனைதது வசதிகளையும் கீழக்கரை எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
இந்த மாநாட்டில் கீழை பதிப்பகம் வெளியீடு அனைத்தும் இலக்கியச் சோலை புத்தக அரங்கில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print














